சென்னை: பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் – திருநெல்வேலி உட்பட 6 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – சென்னை எழும்பூருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 22-ம் தேதி முதல் அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23-ம் தேதிமுதல் அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நீட்டித்துஇயக்கப்படுகிறது. சென்னை எழும்பூர் – வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 23-ம் தேதி முதல்அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
வேளாங்கண்ணி – எழும்பூருக்கு வாரந்தோறும் சனி,திங்கள்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்.
தாம்பரம் – ராமநாதபுரத்துக்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்புரயில் வரும் 29-ம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். ராமநாதபுரம் – தாம்பரத்துக்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 30-ம்தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.