ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1,200 கனஅடியாக உயர்வு


தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1,200 கனஅடியாக உயர்ந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த19-ம் தேதி காலை அளவீட்டின்போது நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக பதிவானது. ஆனால், நேற்று முன்தினம் காலை அளவீட்டின்போது விநாடிக்கு 1,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது.

இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது மீண்டும் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழைகாரணமாக நீர்வரத்து சிறிது அதிகரித்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.