[X] Close

சமூக பிரச்சினைகளுக்காக பெண்கள் போராட வேண்டும்: இரோம் ஷர்மிளா


irom-sharmila-on-women-day

  • முகமது சல்மான்
  • Posted: 09 Mar, 2018 10:44 am
  • அ+ அ-

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரோம் ஷர்மிளா பேசியதாவது: நான் வெறும் பெண்ணிய போராளி அல்ல. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்காவும் போராடி வருகிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துவிட்டன. இதற்கு எதிராக பெண்கள் துணிச்சலுடன் போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் இளம் பெண்களின் வாழ்க்கை சுரண்டப்படுகிறது. தனியார் தொழிற்சாலைகளால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளுக்காகவும் பெண்கள் போராட வேண்டும்.

இவ்வாறு இரோம் ஷர்மிளா பேசினார்.

முன்னதாக இரோம் ஷர்மிளா குறித்து அருட்தந்தை சாகேஷ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. பெண் உரிமை தொடர்பாக மாணவியரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close