[X] Close

கழிவுகள் தேங்கிய வாய்க்காலை தூர் வாரிய புதுச்சேரி அமைச்சர் 


minister-kamalakannan-work-in-pudhucherry

காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் கழிவுகள் தேங்கிய வாய்க்காலில் நேற்று தூர் வாரும் பணியில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்.

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 27 Aug, 2018 15:53 pm
  • அ+ அ-

காரைக்கால் மாவட்டம் அம்ப கரத்தூர் பகுதியில் கழிவுகள் தேங்கிய வாய்க்காலில் இறங்கி புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக் கண்ணன் நேற்று தூர் வாரும் பணியில் ஈடுபட்டார்.

அம்பகரத்தூர் பகுதியில் உள்ள வெட்டியான் வாய்க்கால், அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கர் நிலத்துக்கு சாகுபடிக்கான பாசன வாய்க்காலாகவும், அங்குள்ள குடியிருப்புப் பகுதியின் மழை நீர் வடிகாலாகவும் உள்ளது.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்ப டாமல், கழிவு நீர், பிளாஸ்டிக் குப்பை தேங்கி காணப்பட்டது. தற்போது காவிரியில் நீர் வரத்து உள்ள நிலையில், வாய்க் காலை தூர் வார  அமைச்சர் கமலக்கண்ணனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தூர் வார தாமதம் ஏற்பட்ட நிலையில், வாய்க் காலை அப்பகுதி விவசாயிகளே தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். 

அப்போது அதனை பார்வையிட வந்த அமைச்சர் கமலக்கண்ணன், திடீரென வாய்க்காலில் தூர் வாரும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இதையடுத்து,  தன்னார்வலர்கள், இளைஞர்கள் என பலரும் வாய்க்காலில் இறங்கி கழிவுப் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இப்பணி நடைபெற்றது. விவசாயிகள், தன்னார்வலர்கள் என 30 பேர் இப்பணியில் ஈடுபட்டு வாய்க்காலை சீரமைத்தனர். அமைச்சரின் இப்பணியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close