[X] Close

நான் அரசியலுக்கு உழைத்து வந்தவன்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


tamilnadu-cm-speech-at-mgr-film-institute-function

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 27 Aug, 2018 12:17 pm
  • அ+ அ-

பெப்சி சார்பில் ரூ.5 கோடி செலவில், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளுடன் ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டது. இந்தப் படப்பிடிப்பு தளத் துக்கு ‘எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். படப்பிடிப்பு தளம் வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு முதல்வர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி, கல்வெட்டை திறந்துவைத்தார்

இந்நிழ்ச்சியில், அமைச்சர்கள் பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ மற்றும் தயாரிப் பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி சம்மேளன பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், இயக்குநர்கள் பாரதிராஜா, விக்ரமன், நடிகர் கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக், பொன்வண்ணன்,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி "நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அதனால் உழைப்பவர்களின் கஷ்டம் என்றால் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். அரசியலுக்கு வர எவ்வளவோ வழி உள்ளது. ஆனால் நான் அரசியலுக்கு உழைத்து வந்தவன் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

திரைப்படத் துறை மூலம் அரசியலுக்கு வந்து மாபெரும் சாதனைகளை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிகழ்த்தியுள்ளனர். அரசு சார்பில் விரைவில் விருது வழங்கும் விழா நடைபெறும். மேலும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கக் கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ரூ.5 கோடி மதிப்பில் வெளிப்புற படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும்” என்று கூறினார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close