[X] Close

ஈபிஎஸ் படம் வருது.. ஓபிஎஸ் படம் வருது.. ஜெயலலிதா படம் வரலையே?- சலசலத்த அதிமுக தொண்டர்கள்


admk-cadres-express-grief

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Aug, 2018 12:01 pm
  • அ+ அ-

பெப்சி சார்பில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தள திறப்புவிழாவில் திரையில் இந்நாள் முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் புகைப்படங்கள் எல்லாம் காட்டப்பட்டபோதும் அண்மையில் மறைந்த ஜெயலலிதாவின் புகைப்படம் காட்டப்படாதது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சென்னை அருகே பையனூரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (பெப்சி) சார்பில் கட்டப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜெயலலிதா பெயரில் வெளிப்புற படப்பிடிப்பு தளம் அமைக்க அரசு சார்பில் ரூ.5 கோடி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின் எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் திறப்பு விழாவில் பங்கேற்றதால், திருப்போரூர் முதல் பூஞ்சேரி வரையிலான பழைய மகாபலிபுரம் சாலையில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகளை வைத்திருந்தனர்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் அமர்ந்திருந்த விழா மேடையின் பின்னால், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

அதேநேரத்தில், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் புகைப்படங்கள் திரையிடப்பட்டன. இதனால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close