தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மற்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!
குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!