[X] Close

புதிய கட்சி தொடக்கமா? - மு.க.அழகிரி பேட்டி 


alagiri-starts-new-party

மு.க.அழகிரி | கோப்புப் படம்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 25 Aug, 2018 14:10 pm
  • அ+ அ-

புதிய கட்சி தொடங்குவது குறித்து தொண்டர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக விவசாயிகள் அணி செயலாளர் கே.பி.ராமலிங்கம் இல்லத்திருமண விழா நேற்று நடந்தது. விழாவில்,  திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

திமுகவில் நான் இல்லை. எனவே, என்னிடம் திமுக குறித்த கேள்வியைக் கேட்க வேண்டாம். செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப்பேரணியின் போது எனது பலம் என்ன என்பது தெரியும். சென்னையில் நடைபெறும் அமைதி பேரணியில் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள். புதிய கட்சி தொடங்குவது குறித்து, தொண்டர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுக்கப்படும், என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close