[X] Close

தவறாக பயன்படுத்தப்படும் மதுரை காமராசர் பல்கலை. முத்திரை: பல்கலைக்கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு புகார்


madurai-kamaraj-university-seal-used-illegally

தலைமைச் செயலருக்கு ‘லவ் எம்கேயூ’ என்ற பெயரிலான லெட்டர் பேடில் அனுப்பப்பட்ட புகார் கடிதம்.

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 25 Aug, 2018 14:06 pm
  • அ+ அ-

என்.சன்னாசி 

மதுரை காமராசர் பல்கலைக் கழக முத்திரையை விதிமுறை களுக்குப் புறம்பாக பயன்படுத்தியதாக 22 பேராசி ரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது பல்கலைக்கழகப் பாது காப்புக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த பி.பி.செல்லத்துரைக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், அவரை பதவியில் இருந்து நீக்கி  2 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமைச் செயலருக்கு, பல்கலைக்கழக முத்திரையுடன் ‘லவ் எம்கேயூ’ (மதுரை காமராசர் பல்கலை.யை நேசிப்போர் குழு) என்ற பெயரிலான லெட்டர் பேடில் புகார் கடிதம் ஒன்றை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர். அதில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், லயனல் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இப் புகார் குறித்து விசாரிக்க உயர் கல்விச் செயலருக்கு தலைமைச் செயலர் உத்தரவிட்டார்.

இதுபற்றிய தகவல் வாஞ்சி நாதன் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்துக்கு ஆதரவாக செயல்படும் பல்கலைக்கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பினருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ‘லவ் எம்கேயூ’ என்ற பெயரில் தலைமைச் செயலருக்கு புகார் கடிதம் அனுப்பிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அலுவலர்கள் என 22 பேருக்கு, வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் மூலமாக  வாஞ்சிநாதன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தலைமைச் செயலருக்கு புகார் கடிதம் அனுப்பியவர்களின் செயல், தனது வழக்கறிஞர் தொழிலை பாதித்துள்ளதாகவும், மேலும் அவர்கள் பல்கலைக்கழகத்தின் முத்திரையை விதிமுறைகளை மீறி லெட்டர் பேடில் பயன்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பாக பல்கலைக் கழகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு செயலர் முரளி கூறியதாவது: 

தலைமைச் செயலருக்கு புகார் கடிதம் அனுப்பியோர் முன்னாள் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரையின் ஆதரவாளர்கள். அவரது பதவி பறிபோனதால் குறுக்கு வழியில் ஏதாவது செய்ய முடியுமா என நினைத்து செயல்பட்டு வருகின்றனர். 
 ‘லவ் எம்கேயூ’ என்ற பெயரிலான லெட்டர் பேடில் பல்கலைக்கழகத்தின் முத் திரையை பயன்படுத்தியது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலர், உயர்கல்வி செயலருக்குப் புகார் கடிதம் அனுப்ப உள்ளோம் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close