திமுக மகளிரணி சார்பில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கு வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து #GoBackSona என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் இன்று மகளிர் உரிமை மாநாட்டு நடைபெறுகிறது. அதில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரையும் வரவேற்றார். அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில், எக்ஸ் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #GoBackSona என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா உதவியதாக கூறி, தமிழ் அமைப்பினரும், எதிர்க்கட்சி என்ற நிலைப்பாட்டுடன் பாஜவினரும் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குரூப் தேர்வு தாமதம்... இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்! குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்! ‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு! இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பிரபல நகைச்சுவை நடிகர் கைது! பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!