நாகப்பாவை தூக்கிய வீரப்பனுக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா?... சீமான் பரபரப்பு பேட்டி


சீமான்

நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், சந்தனமரம் தான் இந்த மாவட்டத்தின் பெரும் வருவாயாக இருந்தது. மீண்டும் வனத்துறை அமைச்சகம், சந்தன மரங்களை நட்டு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். வீரப்பன் இருக்கும் வரை மரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தன.

அவர் மீது அநியாயமாக சந்தன மரங்களை வெட்டிக் கடத்தினார், யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்தினார் போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்.

அவர் காட்டில் இருந்தவரை ஒருவர் கூட காட்டுப்பக்கம் போனது இல்லை. அவர் இருக்கும்போது காவிரி பிரச்சினை வந்திருக்குமா? அவர் மீது அநியாயமாக பழிபோட்டு மாயாவி திருடன் என்று சொல்கிறார்கள். அவர் சந்தன மரங்களை வெட்டிக் கடத்தினார். யானை தந்தங்களை கடத்தினார் என்று சொல்கிறார்கள். அத்தனையையும் ஒப்புக்கொள்கிறேன். சரி விற்றவர் இங்கே இருக்கிறார். அதனை வாங்கியவர் எங்கே என்று கேட்டால் பதில் இல்லை.

சரி, அதை எல்லாம் விற்கு காட்டுக்குள் அவர் என்ன பங்களாவா கட்டினார்? ஏதாவது சேர்த்து வைத்துள்ளாரா? காட்டுக்குள் இருந்தவர் சாராயம் காய்ச்சி விற்றாரா? பீடி, சிகரெட் குடித்தாரா? கட்டிய மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் தூக்கி சென்றாரா?

நாகப்பாவை தூக்கிக்கொண்டு போன அவருக்கு நயன்தாராவை தூக்கத் தெரியாதா? தமிழர் மரபு தவறாமல் வாழ்ந்தவர். அவர் வெளியே வந்து பேசிவிட்டால் நாம் சிக்கிவிடுவோம் என்பதால் அவர் மீது பழியை போட்டுக் கொன்றுவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும்," நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். வேட்பாளர் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் வெளியிடுவோம்" என்று கூறிய அவர்," இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான பிரச்சினைக்கு யார் முன்னுக்கு நிற்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான தலைவன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

x