உ.பியில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி!


மிஷன் சக்தி திட்டம்

உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புற பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டம் 4.0 விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது என அந்த மாநில அரசு அறிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால், இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார்.

மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் மிஷன் சக்தி திட்டம். இந்த திட்டத்தின் 4வது பகுதி விரைவில் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத்

பெண் குழந்தைகளின் தற்காப்புத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், அறிவையும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 36,816 கிராம பஞ்சாயத்துகளில், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அரசு பெண் ஊழியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவும், உள்ளூர் மகளிர் போலீஸ் மூலமாகவும் தற்காப்பு பயிற்சிகள் கற்பிக்கப்படும்.

இந்த திட்டம் ஏற்கெனவே 3 கட்டங்களாக செயல்படுத்தப்படுள்ளது. இந்நிலையில் இந்த மாதத்தில் இதன் நான்காவது கட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

x