[X] Close

உண்மையிலேயே உதவுகிறதா யுஏஇ?- கொளுத்திப் போடும் குருமூர்த்தி


gurumurthy-tweets-again-and-creates-furore

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Aug, 2018 09:44 am
  • அ+ அ-

கேரள அரசுக்கு ஐக்கிய அரபு எமீரகம் உண்மையிலேயே ரூ.700 உதவுகிறதா? இல்லை இது வெறும் தனிநபர் தகவலா? என்று ட்வீட் செய்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உதவ ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிதியுதவி அளிக்க முன்வந்தும், அதைப் பெற மத்திய அரசு மறுத்துவருவதால் வாத விவாதங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.

இயற்கை பேரிடர், வெள்ளம்,பூகம்பம் போன்ற நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் போது, நம் நாட்டுக்கு உதவும் வகையில் வேறு எந்த நாடுகளாவது நிதியுதவி உள்ளிட்ட உதவிகளை அளித்தால், அதை பெறலாமா என்பது குறித்து கடந்த 2016-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்(என்டிஎம்ஏ) ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ஆவணங்களை அலசி ஆராய்ந்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மட்டும் வேறு ஒரு கோணத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

"உண்மையிலேயே யுஏஇ நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதா? இல்லை இது வெறும் தனிநபர் தகவலா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார்.

பிரஃபுல்ல கேட்கர் என்பவர் பதிவு செய்த ட்வீட்டில் ஆங்கில தொலைக்காட்சியின் இணையதள செய்தியை சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆகஸ்ட் 21-ம் தேதி பதிவான அந்த செய்தியில், "வெளிநாடு வாழ் கேரள மக்கள் பெரும் உதவியாக உள்ளனர். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க சேவையை செய்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கு நாடுகளுடன் கேரளாவுக்கு நல்ல நட்புறவு நிலவுகிறது. இன்று காலை, யுஏஇ ஆட்சியாளர்கள் நமது பிரதமருக்கு கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து பேசியிருக்கின்றனர். இத்தகவலை லூலூ சூப்பர் மார்கெட் உரிமையாளர் எம்.ஏ.யூசுப்அலி என்னிடம் தெரிவித்தார்" என பினராயி விஜயன் கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே செய்தியில் யுஏஇ நிதியுதவியை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறது. 

இவரது ட்வீட்டுக்கு ரிப்ளை செய்துள்ள குருமூர்த்தி கேரள அரசுக்கு ஐக்கிய அரபு எமீரகம் உண்மையிலேயே ரூ.700 உதவுகிறதா? இல்லை இது வெறும் தனிநபர் தகவலா? என்று சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.
ஏற்கெனவே கேரள மழை வெள்ளத்தையும் சபரிமலை வழக்கையும் தொடர்புபடுத்தி பேசி சர்ச்சையைக் கிளப்பினார் குருமூர்த்தி. தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை ட்வீட்டை அவர் பதிவு செய்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close