’கோடநாடு குற்றவாளிகள் யார் என்பது விரைவில் வெளி வரும் என்றும் தவறு செய்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் இறுதிநாளான இன்றைய கூட்டத்தின் போது, கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசிய வைத்தியலிங்கம், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’உறுப்பினர் வைத்தியலிங்கம் கோடநாடு பிரச்சினை பற்றி பேசி உள்ளார். அது சிபிசிஐடி வழக்கில் உள்ளது எல்லோருக்கும் தெரியும். சிபிசிஐடி நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் விசாரிக்கத் தொடங்கி உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
கோடநாடு வழக்கில் யார் யார் தவறு செய்து இருக்கிறார்கள் என்பது மிக விரைவில் வெளி வர உள்ளது. அவர்கள் எப்படிப்பட்ட இடத்தில் இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்’’ என கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...