ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்கிறார். இதன்மூலம் ஆட்டோ கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. 2023-24ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நிறைவடைகிறது. இன்றைய கூட்டத்தொடரில் வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆகிறது. சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பான சட்ட முன் வடிவும் இன்று தாக்கல் ஆகிறது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார். இதன் மூலம் ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!