முதல்வர் ஸ்டாலினை ஆண்டவன் என்று அழைத்த அமைச்சர்! சட்டப்பேரவையில் சிரிப்பலை


அமைச்சர் சேகர் பாபு

காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, இந்த ஆட்சியை ஆண்டு கொண்டிருக்கிற ஆண்டவன் இடத்தில் ஒப்படைக்கிறோம். நிச்சயமாக அவர் நிறைவேற்றித் தருவார் என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, "தமிழகத்தில் 3500 கோடி மதிப்பில் திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்டுள்ளோம். ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கும் பல கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளையும் செய்துள்ளோம். ஆத்திகர்களையும், நாத்திகர்களையும் ஒன்றாக அரவணைத்து செல்லும் இயக்கம் திமுக" என்று கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், சிவகாசியில் இரண்டு குறுக்கு ரயில்வே மேம்பாலங்கள் இருக்கின்றன. ஒன்று திருத்தங்கலிலும் இன்னொன்று செல்லத்தூர் சாலையிலும் இருக்கிறது. செல்லத்தூர் பகுதியில் இருக்கும் மேம்பாலத்தை வேகமாக முடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், அது கல்லூரி சாலையாக இருப்பதால் அதை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, "இந்த ஆட்சியை ஆண்டு கொண்டிருக்கிற ஆண்டவன் இடத்தில் ஒப்படைக்கிறோம். நிச்சயமாக அவர் நிறைவேற்றித் தருவார் என்று பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டவர்களை சிரித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வந்தாச்சு... டிசம்பர் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

x