தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி அதிமுகதான்... அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!


எடப்பாடி பழனிசாமி

’’தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி அதிமுக தான். உதயநிதி போன்றவர்கள் மாய உலகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு முடிவு கட்டுவார்கள்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி யார் என்று மக்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள் அவர்கள் சொல்வார்கள், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி அதிமுகதான்.

மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல உதயநிதி ஸ்டாலின் அவர் மாய உலகத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள். மேலும் பாஜகவுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்று தெளிவாக உள்ளோம். இது தமிழக மக்களின் உரிமை நிலை நாட்டுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு’’ என்றார்.

x