அரசுப் பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இடஒதுக்கீடு- முதல்வர் அதிரடி அறிவிப்பு


வாக்களிக்க காத்திருக்கும் பெண்கள்

மத்தியபிரதேச மாநிலத்தில் அரசு பணிகளில் பெண்களுக்கு, 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில அரசு சட்ட திருத்தத்தை வெளியிட்டு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த 3 மாத காலத்திற்குள் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து பெண்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கும் அதிகமான பெண் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களை கவர்வதற்காக அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை இரு கட்சிகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்திருந்தது.

ம.பி.முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

இதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேச மாநில பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மாநிலத்தில் உள்ள அரசு பணிகளில், பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மகளிர் நியமனத்திற்கான சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து, வனத்துறை தவிர்த்து அனைத்து அரசு துறைகளிலும் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

x