[X] Close

நகைக்கடையில் ரூ.3 கோடி தங்க நகைகள் கொள்ளை: கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் தூக்கிச் சென்றனர்


robbery-in-chennai-jewelley

  • Team
  • Posted: 07 Mar, 2018 11:00 am
  • அ+ அ-

திருமங்கலத்தில் நகைக்கடையின் மேல் தளத்தில் இருந்த இரும்புக் கதவை பெயர்த்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் போலீஸார் தங்களை எளிதில் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சி டிஸ்குகளையும் எடுத்துச் சென்றனர்.

சென்னை திருமங்கலம் நேரு நகரில் ஏ.கே.எஸ். ஜூவல்லரி என்ற பெயரில் 3 மாடிகளை கொண்ட நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படும். அதன்படி நேற்று முன் தினம் இரவு பூட்டப்பட்ட கடையை நேற்று காலையில் திறந்துள்ளனர். அப்போது நகைக்கடையின் 3 தளங்களிலும் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க.... 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close