[X] Close
 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவந்த அதிமுக நிர்வாகி கூட்ட நெரிசலில் சிக்கி பலி


man-dies-in-stampede

  • பாரதி
  • Posted: 10 Aug, 2018 12:10 pm
  • அ+ அ-

திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் ஒருவர் அதிமுக நிர்வாகி என்பது  தெரியவந்துள்ளது.

கடந்த 8-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி அரங்குக்கு வந்தவர்களில் சிலர் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில்  மூவரது அடையாளம் தெரியவந்தது. செண்பகம் (60), சரவணன் (37) துரை (45) ஆகியோர் பலியாகினர். 4-வது நபர் அடையாளம் தெரியாமல் இருந்தது.
4-வது நபரின் புகைப்படம் ஒரு நாளிதழில் வெளியாக அதைப் பார்த்து உறவினர்கள் சென்னை வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

அதன்படி அந்த நபர் வேலூரைச் சேர்ந்த மோகன் (65) எனத் தெரியவந்துள்ளது. இவர் வேலூர் கன்பா பகுதியில் அதிமுக துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் பாலாஜி என்ற மகனும் இந்துமதி என்ற மகளும் உள்ளனர். இவர் அதேபகுதியில் துணிகளை இஸ்திரி செய்யும் கடையும் நடத்தி வந்துள்ளார்.

அண்ணா காலத்தில் திமுகவில் இருந்த மோகன் எம்.ஜி.ஆர் பிரிந்து கட்சி ஆரம்பித்தவுடன் அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில் கருணாநிதி மறைவு செய்தி கேட்டவுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close