திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ள அதிமுக: தமிழக அரசியலில் பரபரப்பு!


திருமாவளவன்

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக நாளை அதிமுக பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ள நிலையில், அந்த பேரணியில் திருமாவளவன் கலந்துக் கொள்ள வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டத்தை முன்னெடுத்தால் அதில் விசிக பங்கேற்கும் என அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ’’ தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டஒழுங்கு சீர்க் கொட்டு உள்ளது. காவல்துறையும் அதனை கையில் வைத்திருக்கும் முதல்வரும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளது. அதனால் தான் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதிமுக மதுவிலக்கு போராட்டத்தை முன்னெடுத்தால் நிச்சயம் விசிக கலந்துக் கொள்ளும் என திருமாவளவன் அறிவித்திருந்தார். அவருக்கு இந்த நேரத்தில் நாளை நடைபெறும் பேரணியில் அவரும் கலந்துக் கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்’’ என்றார்.

திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x