[X] Close

அவதூறு பரப்பிய இளைஞர் சங்கரலிங்கத்தை கைது செய்தது எப்படி?


sangaralingam-arrest

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 11:43 am
  • அ+ அ-

திருச்சியில் போக்குவரத்து போலீஸார் நடத்திய வாகன சோதனையின்போது உஷா என்ற பெண் பலியான சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த சம்பவத்தைக் குறித்தும் ஒட்டு மொத்த தமிழ்நாடு காவல்துறை ஆகியவற்றை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும், கலவ ரத்தை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியதாக சங்கரலிங்கம் என்பவர் மீது மார்ச் 21-ம் தேதி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  

சமூக வலைதளங்களில் காவல்துறை தொடர்பாக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சிவகங்கையைச் சேர்ந்த இளைஞரை குவைத் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி உஷாவுடன் கடந்த மார்ச் 7-ம் தேதி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது துவாக்குடி சுங்கச் சாவடி அருகே வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஹெல்மெட் அணியாமல் வந்த அவரை நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ், மோட்டார் சைக்கிளை உதைத்ததால் தடுமாறி கீழே விழுந்த ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து அன்றைய தினம் இரவு பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சி- தஞ்சாவூர் போக்குவரத்து சிலமணி நேரத்துக்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

அவதூறு பரப்பிய சங்கரலிங்கம்..
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் ஒட்டு மொத்த தமிழ்நாடு காவல்துறை ஆகியவற்றை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியும், கலவ ரத்தை தூண்டும் வகையிலும் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியதாக சங்கரலிங்கம் என்பவர் மீது மார்ச் 21-ம் தேதி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் நெடுங்குளம் கிராமம் பலித்தாம்மன் பகுதியைச் சேர்ந்த செல்லையா மகன் என்பதும், அவர் குவைத் நாட்டில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இளைஞர் மீது பாய்ந்த லுக் அவுட் நோட்டீஸ்..
சங்கரலிங்கம் மீது போடப்பட்ட எப்ஐஆர் விவரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங் களுக்கும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் குவைத் அரசுக்கும் சங்கரலிங்கம் குறித்த தகவல் தெரிவித்து, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து சங்கரலிங்கத்தின் விசாவை ரத்து செய்து, அவரை நாடு திரும்ப உத்தரவிட்டது குவைத் அரசு.

இதனால் சங்கரலிங்கம் குவைத்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 30-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத் துக்கு வந்தார். விமான நிலையங் களில் லுக் அவுட் நோட்டீஸ் மூலம் அலர்ட் செய்து வைக்கப்பட்டிருந்த தால், அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே குடியுரிமை அதிகாரிகள் பிடித்து வைத்து, தமிழக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற சென்னை போலீஸார் சங்கரலிங்கத்தைப் பிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

சங்கரலிங்கம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் அவரை புழல் சிறையில் அடைத் தனர். இந்த தகவல் கிடைத்த தும், திருவெறும்பூர் போலீஸாரும் சங்கரலிங்கத்திடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கை யில் இறங்கியுள்ளனர்.

மகன் கைது; கதறும் தாய்..
சங்கரலிங்கத்தின் தாயார் வசந்தா கூறுகையில், “வெளி நாட்டில் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மகனிடம் கேட்டேன். உடனே அவன், ‘எனக்கு ஒரு பிரச்சினை என்றால் என் பின்னால் 100 கோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள்’ என்றான். ஆனால் அவனை இப்போது அநியாயமாக கைது செய்து இருக்கிறார்கள். ஒருவர்கூட கேள்வி கேட்கவில்லை.
குடும்ப வறுமை காரணமாக 10-ம் வகுப்புடன் படிப்பை முடித்து விட்டு, குவைத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டான். அவன் வெளிநாடு செல்வதற்குகூட கடன் வாங்கி தான் செலவு செய்தோம். அந்த கடனை கூட இன்னும் அடைக்கவில்லை. அதற்குள் அவனை வரவழைத்து கைது செய்து விட்டார்கள்” என்று அழுதார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close