'இவர்களுக்குள் எந்த பிளவும் இல்லை' - ஒற்றுமைக்கான வீடியோவை வெளியிட்டது காங்கிரஸ்!


சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார்

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவும், மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் ஒற்றுமையாக இருப்பதை வெளிக்காட்டும் வகையில், காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில், “ஒன்றாகச் சேர்ந்தால் நம்மால் முடியும், நாம் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளது. அந்த வீடியோவில், சித்தராமையாவின் உடையின் பாக்கெட்டை சிவக்குமார் சரிசெய்யும் போது, இருவரும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸின் இரண்டு முக்கிய தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே விரிசல் விரிவடைவதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த மோதல் பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்றும் பேசப்பட்டது. சித்தராமையா சமீபத்தில் அளித்த பேட்டியில், வரவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தான் தனக்கு கடைசி சட்டசபை தேர்தல் என்று கூறியிருந்தார். மேலும் தாங்கள் இருவரும் முதல்வர் வேட்பாளர்கள் என்றும், யார் முதல்வர் என்பதை தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

x