பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், காங்கிரஸ் ஒரு "டீம் பிளேயராக" இருக்க வேண்டும் என்றும், பிராந்திய சக்திகளுடன் கூட்டு சேர வேண்டும் என்றும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமாகிய கவிதா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டமன்ற உறுப்பினரான கவிதா டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் இனி ஒரு தேசியக் கட்சி அல்ல , அது எப்போது தனது ஆணவத்தை விட்டுவிட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளும் என்று ஆச்சரியமாக உள்ளது. பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் ஒரு "டீம் பிளேயராக" இருக்க வேண்டும்” என்று கூறினார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தக் கோரி ஜந்தர் மந்தரில் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கவிதா டெல்லி வந்துள்ளார். நாளை மறுநாள் டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்காக அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். ஜந்தர் மந்தரில் நாளை நாளை நடைபெறும் போராட்டத்தில் 18 கட்சிகள் பங்கேற்கின்றன என கவிதா தெரிவித்தார்.