திருவான்மியூர் கோயில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பக்தர் உயிரிழப்பு


சென்னை: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் உழவாரப் பணியில் ஈடுபட்ட பக்தர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணியில் சிவனடியார்கள் 30 பேர் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பழனி (45) என்பவர் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்யும் போது தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக, அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x