`கூட்டணி காரணமாக வாயடைத்து நிற்கிறேன்'- திருமாவளவன் வேதனைப்பட என்ன காரணம்?


திருமாவளவன்

தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியற்று வாழ்கிறார்கள் என்றும், தேர்தல் கூட்டணி காரணமாக பல இடங்களில் நான் வாயடைத்து நிற்கிறேன் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழினப் படுகொலை ஆவண நூல் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், @ஈழப்படுகொலை நடந்து இத்தனை ஆண்டுகள் முடிந்தும் அவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சர்வதேச சமூகத்தில் பேசுவதற்கு ஒரு நாடு தேவை நம் கண்ணுக்கு தெரிந்திருப்பது கனடா மட்டும்தான். கனடா ஒரு பெரிய நாடு தான். மதச்சார்புள்ளவர்கள் இடம் பெற்றிருக்கிற ஒரு வல்லரசு நாடு தான். பிரிட்டிஷ் கவுன்சிலில் உறுப்பு நாடாக இருக்கிற ஒரு நாடு தான். இந்த கனடாவை எப்படி பேச வைப்பது. அது தான் நம்முடைய வேலையாக இருக்க வேண்டும். கனடா போன்ற இன்னும் சில நாடுகளை எப்படி அந்த அணியிலே சேர்ப்பது? அதுதான் நம்முடையாக வேலையாக இருக்க வேண்டும்.

என்ன பெரிய முரண் என்றால் தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்களாகிய நாம் இந்திய நாட்டு குடிமக்கள் என்கிற அடிப்படையில் இந்திய நாட்டைப் பேச வைக்க வேண்டும். அதைத்தான் நாம் செய்ய முடியும். அதுதான் நம் முன்னால் இருக்கின்ற சவால். தமிழகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியற்று வாழ்கிறார்கள். தேர்தல் கூட்டணி காரணமாக பல இடங்களில் நான் வாயடைத்து நிற்கிறேன்'' என்று வேதனை தெரிவித்தார்.

x