சென்னை சென்ட்ரலில் தபால் அலுவலக மேற்கூரை இடிந்து விழுந்து 2 ஊழியர்கள் படுகாயம்


சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தபால் பிரிக்கும் அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் தபால்கள் பிரிக்கும் அலுவலகம் உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இக்கட்டிடத்தின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது. இதில் ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.