[X] Close

அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும்; தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடுதல் அவசியம்: சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 07:44 am
  • அ+ அ-

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும். மேலும் நீதிமன்ற தீர்ப்புகள் மக்களுக்குப் புரியும் வகையில் மாநில மொழிகளில் வெளியிட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ப.சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானி ஆகியோரை சிறந்தநீதிபதிகளாக தமிழ்நாடு டாக்டர்அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான சிறப்பு பட்ட மளிப்பு விழா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை யில் சென்னை பெருங்குடியில் உள்ள பல்கலைக்கழக வளாகத் தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு தேர்வு செய்யப் பட்ட 3 நீதிபதி களுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:ஒரு பல்கலைக்கழகம் 3 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை. நீதித்துறையில் சிறப்பான சேவை செய்ததற்காக இவர்களுக்கு ‘சட்டவியல் முனைவர்’ பட்டம் தரப்பட் டுள்ளது. நம் நாட்டில், சமூகம், பொருளாதாரம் மாறுவதுபோல சட்டத்தொழிலும் மாறிவருகிறது. சட்டம் பற்றிய நமது புரிதலும், அதன் செயல்பாடுகளும் விரிவடைந்து இப்போது நவீனமடைந் துள்ளன.

அதேநேரம் சாமானிய மக்களுக்கான சட்ட உள்கட்டமைப்பு மற்றும் நீதிக்கான அணுகுமுறைகளில் நாம்போதுமான கவனம் செலுத்துகி றோமா என்ற கேள்வி எழுகிறது. மேலும், சட்டவிதிகளை எளிமையாக்குவதற்கான தேவைகளும் இப்போது உயர்ந்துள்ளது.

மாநில மொழியில் தீர்ப்புகள்

வழக்கின் தீர்ப்புகள் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் இருக்க வேண்டும். தீர்ப்புகளின் சான்றிதழ் பெற்ற நகல்களை உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் உயர் நீதிமன்றங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சான்றளிக் கப்பட்ட தீர்ப்புகளின் நகல்களை மொழிபெயர்த்து வெளியிடலாம். தவறாக பயன்படுத்தப்படும் வாய்தாநீதியை விரைவாகவும், மலிவாக வும் கிடைக்கச் செய்வதில் வழக்கறிஞர் சமூகத்துக்கு முக்கிய பொறுப்புள்ளது. நம் சட்டமுறை அதிக செலவுடையது, தாமதப்படு கிறது எனக் கூறப்படுகிறது. வாய்தாஎன்ற கருவி அவசரகால நடவடிக்கைக்கு பதில் வழக்கு விசார ணையை தாமதப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி பெற அதிகம் செலவிட வேண் டியுள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க நீதித்துறை வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதை தமிழகம் பழங்காலம் முதலே உறுதியாகக் கடைபிடித்து வருகிறது. மனுநீதி சோழன், சிபி சக்கரவர்த்தி போன்ற நீதிக்கு தலைவணங்கும் எண்ணற்ற மன்னர்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர். அத்தகைய நீதிமன்றம் மற்றும்சட்டக்கல்வி மேம்பாட்டுக்கு அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

3 புதிய சட்டக்கல்லூரிகள்

அதன்படி இந்த ஆண்டு மேலும் 3 புதிய அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. சட்டத்தின் எல்லா பயன்களும் ஏழைகளைச் சென்றடைய வேண்டும். அந்த இலக்கை அடைய நீதிபதிகளும், நீதிமன்றங்களும் உரிய நடவடிக் கைகள் எடுக்க வேண்டும், அதற் குரிய ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கும்’’ என்றார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் த.சூ.நா.சாஸ்திரி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close