முன்னாள் எம்பி மஸ்தான் கொலையில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி?- அதிர்ச்சி தகவல்


திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலையில் குற்றவாளிகள் சிக்கியது எப்படி? என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு செயலாளருமாக இருந்த டாக்டர் மஸ்தான், கடந்த 22-ம் தேதி இரவு சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, மூச்சுத்திணறி மஸ்தான் உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததையடுத்து, காவல்துறை நடத்திய தீவிர விசாரணை நடத்தினர்.

மஸ்தான் கொலை வழக்கில் கைதனாவர்

மஸ்தான் கொலை வழக்கில் கைதனாவர்

இதனிடையே, மஸ்தானின் சகோதரரின் மருமகன் சித்தா டாக்டர் சுல்தான் அகமது, கார் டிரைவர் இம்ரான், நண்பர்கள் நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகியோரை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. மஸ்தான் தனது உறவினர்களுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறார். இந்தப் பணத்தை அவர் திருப்பி கேட்டுள்ளார். இதனால் அவரை கொல்ல உறவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். சம்பவத்தன்று மஸ்தான் காரில் சென்று கொண்டிருக்கும்போது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கார் டிரைவர் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார்கள்.

பின்னர் கார் டிரைவர் உடனடியாக அருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மஸ்தானை அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஸ்தான் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மஸ்தானின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த கார் ஓட்டுநர், மஸ்தான் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

இதனால், தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மஸ்தான் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மஸ்தான் கொலை செய்யப்பட்டிருப்பது உறவினர்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

x