[X] Close

மக்களவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுப்பிய இந்தி கடிதத்தால் தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:19 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி துவக்கிய ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை நாடாளுமன்றத்தில் செயல்படுத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாஅனுப்பிய கடிதம் நேற்று எம்.பி.க்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. இது இந்தியில் எழுதப்பட்டிருந்ததால் அதை புரிந்து கொள்ள முடியாமல் தமிழகம் உள்ளிட்ட தென்மாநில எம்.பி.க்கள் பலரும் தவித்தனர். இதனால், அதிருப்திக்கு உள்ளானவர்களில் சிலர் அக்கடிதத்தை ஆங்கிலத்தில் அளிக்கும்படி பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சபாநாயகர் பிர்லாவின் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி கடந்த அக்டோபர் 2, 2014-ல் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை துவக்கினார். தற்போது நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை துவக்கும்போது அக்டோபர் 2, 2019-க்குள் வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை குப்பைகள் இன்றி சுத்தப்படுத்த உறுதி ஏற்கப்பட்டது. மகாத்மாவின் வரும் பிறந்தநாள் 150-வது பிறந்தநாளாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நல்ல சூழலில் வரும் ஜூலை 13, 14-ல் ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த மனிதநேய நிகழ்ச்சியை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, நாடாளுமன்ற வளாகத்தின் வாயில் எண் ஒன்றின் முன் அமைந்துள்ள காந்தி சிலை முன்பாக அனைத்து உறுப்பினர்களும் கூடிஇருக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் விழுப்புரம் தொகுதியின் எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான டி.ரவிகுமார் கூறும்போது, ‘‘எம்.பி.க்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதன் ஆங்கில வடிவமும் இணைத்து அனுப்பியிருக்கலாம். பல எம்.பிக்களுக்கும் அது புரியாமல் அதிருப்தி அடைந்திருந்தனர். எனக்கும் புரியாமையால், இனி உறுப்பினர்களுக்கு அனுப்பும் கடிதத்தின் ஆங்கில வடிவத்தையும் அளிக்க வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close