[X] Close

கொள்கை முடிவு எடுக்க அவகாசம் தேவை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:09 am
  • அ+ அ-

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் கொள்கை முடிவு எடுக்கவில்லை. இதுதொடர்பாக முடிவெடுக்க அவகாசம் தேவை என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையைச் சேர்ந்த கிருஷ்ண நாயர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நான் நீட் தேர்வில் வெற்றிபெற்று பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட்டுக்கு விண்ணப்பித்தேன்.

தமிழகத்தில் மத்திய அரசின்பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே, இச்சட்டத்தை அமல்படுத்திய பின்னர்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சுரேஷ்குமார் நேற்று விசாரித்தார். அரசு தரப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்கவில்லை. அது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. எனவே போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையேற்று விசாரணையை ஜூலை 25-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close