[X] Close

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் எழுத்து மூலம் பதில்


  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:07 am
  • அ+ அ-

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நேற்றுமாநிலங்களவையில் மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் உறுதிப்படுத்தி உள்ளார்.

பூமியின் மேலே இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் (கோலக்கதிர்கள்), சுற்றுச்சூழலோடு வினைபுரியும்போது நியூட்ரினோ துகள்கள் கிடைக்கின்றன. இந்த நியூட்ரினோ துகள்களை ஆராய்ச்சி செய்தால் பூமி உண்டான விதம், அதன்பரிமாணம், பூமியின் கட்டமைப்புகளைப் பார்க்க முடியும்.

இதற்கான நியூட்ரினோ ஆய்வு மையத்தை நாட்டில் அமைக்க இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் (Indian Based Neutrino Observatory) முடிவு செய்தது. அதற்காக மேற்கு தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் உள்ளதேனி மாவட்டம் அம்பரப்பர் மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்தனர். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இதற்காக நாடுமுழுவதும் 25 அறிவியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு அவர்கள் மதுரையில் மாதிரி நியூட்ரினோ மையம் அமைத்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வு மையம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் பல்லுயிர் பெருக்கத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற சர்ச்சை நிலவுகிறது.

நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சுற்றுச்சூழல் துறை, மத்திய வன உயிரினவாரியம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்பி ஏ.விஜயகுமார், நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர்ஜிதேந்திரசிங் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. நியூட்ரினோ துகள்களைக்கண்டுபிடிக்க உதவியாக 2 கி.மீ., தூரம் மலையைக் குடைந்து இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. அதில் நியூட்ரினோ துகள்களைக் கண்டுபிடிக்க 51 ஆயிரம்டன் எடையுள்ள இரும்பு கலோரிமீட்டர் உணர் கருவி அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பூமியைக் குடைந்து அமைக்கப்படவில்லை. அதனால், வெளியில் எந்தச் சத்தமும், எந்தக் கதிர்வீச்சுகளும் ஏற்படாது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை. இந்தத் திட்டம் சுற்றுச்சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காது. நாட்டில் வேறு எங்கும் இந்த நியூட்ரினோ திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூட விஞ்ஞானி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘நியூட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமான ஆக்கப்பூர்வமான திட்டம்.

அழிவுத்திட்டம் கிடையாது. இந்தத் திட்டத்துக்கு ஏற்கெனவேமத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி மட்டுமே பெற வேண்டும். அதற்காகஇந்தத் திட்டம் காத்திருக்கிறது’’ என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close