[X] Close

குடியரசுத் தலைவர் இன்று வருவதை ஒட்டி அத்திவரதர் தரிசனம் பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தம்: மாலை 5 மணிக்கு மீண்டும் தொடக்கம்


1-5

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:03 am
  • அ+ அ-

காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரைத் தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி பொது தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்படுகிறது. மீண்டும் 5 மணி முதல் பக்தர்கள் அத்திவரதரை வழக்கம்போல் தரிசிக்க முடியும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுந்தருளி இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்தையும் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் வருகிறார். சென்னைக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வருகிறார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் உள்ளஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ஹெலிகாப்டரை இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் அவர் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.

தரிசனம் நிறுத்தம்

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி பொது தரிசனம் பிற்பகல் 1 மணியுடன் நிறுத்தப்படுகிறது. அத்துடன் கிழக்கு கோபுர வாசல் கதவு மூடப்படும். அதன் பிறகு கோயிலுக்குள் இருப்போர் மட்டும் பிற்பகல் 2 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்யலாம். அதன் பிறகு தரிசனம் கிடையாது. மாலை 5 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடங்கும். முக்கிய பிரமுகர்கள் தரிசனம் செய்யும் வழி பாதுகாப்பு கருதி காலை 10 மணிக்கு நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் போலீஸார்

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி அதிவிரைவுப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். ஹெலிகாப்டர் ஒன்று நேற்று வரதராஜ பெருமாள் கோயிலையும், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியையும் வட்டமிட்டபடி உள்ளது. போலீஸார்பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close