[X] Close

9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு


9

  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 09:12 am
  • அ+ அ-

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடக்கு ஆந்திரா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக தமிழகம் வழியாக ஈரப்பதம் மிகுந்த காற்று நுழைந்து செல்ல வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் 2 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், நீலகிரி மாவட்டம் தேவாலா, வேலூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close