[X] Close

தனியொருவராக திமுக சென்ற தங்க தமிழ்ச்செல்வன்; அங்கேயாவது உண்மையாக இருக்கவேண்டும்: புகழேந்தி


  • kamadenu
  • Posted: 28 Jun, 2019 18:22 pm
  • அ+ அ-

ஆதரவாளர்கள் இல்லாமல்,  தங்க தமிழ்ச்செல்வன் தனியொருவராக திமுகவுக்குச் சென்றுள்ளார். அங்கேயாவது அவர் உண்மையாக இருக்கவேண்டும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவாகவும் அமமுக நிர்வாகியாகவும் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அமமுக நிர்வாகியான புகழேந்தி தனியார் தொலைக்காட்சியில் பேசும்போது, ''இரண்டு நாட்களுக்கு முன்னால் நிருபர்கள் கேட்டபோது, அமமுகவில் இருந்து விலகுவது என்பது வெறும் வதந்தி என்றார். ஆனால் இன்று திமுகவில் இணைந்துவிட்டார். ஜெயலலிதா தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதவிகள் கொடுத்து அழகுபார்த்தார்.

சிலர் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு, தொடர்ந்து துரோகம் செய்கின்றனர். காலம் அவருக்குப் பதில் சொல்லும். தேனியில் இருந்து ஒரு ஆதரவாளர்கூட சென்னை வரவில்லை. தங்க தமிழ்ச்செல்வன் தனியொருவராக திமுகவுக்குச் சென்றிருக்கிறார். 

எங்கே வேண்டுமானாலும் அவர் செல்லட்டும். இயக்கம் யாரையும் நம்பி இல்லை. தங்க தமிழ்ச்செல்வன் சென்றதால் அமமுகவுக்குப் பாதிப்பில்லை. தோல்வி ஒரு கட்சிக்கு நிரந்தரமானதல்ல. தோல்வியின்போது வெளியே சென்று, இவர் எவ்வளவு விசுவாசமானவர் என்று காட்டியுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் அங்கேயாது நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும்'' என்றார் புகழேந்தி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close