[X] Close

சிங்கப்பூர் போய் வந்து இப்போது தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்: ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 12:26 pm
  • அ+ அ-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர்  சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் முறையாக தண்ணீர் வழங்கக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும், நேற்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சிங்காரச் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவிட்டு வந்து இங்கே தண்ணீர் எங்கே என்று போராடுகிறார்.

சிங்கப்பூர் சென்றதற்குப் பதிலாக பெங்களூரு சென்று அவர்களின் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் நீர்ப்பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் மேகேதாட்டுவில் அணை  கட்ட வேண்டாம்  என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரைப் பாராட்டி இருக்கலாம்.

மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்குப் போராடுவதா? இதுபோன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்", என தமிழிசை பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close