[X] Close

சட்டப்பேரவையில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை இ-மெயிலில் அனுப்புங்கள்: மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 24 Jun, 2019 16:28 pm
  • அ+ அ-

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும்.

உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினை என நீங்கள் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். #VoiceofTN என்ற ஹேஷ்டேக் இதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் இன்று (திங்கள்கிழமை) காலை அறிவித்தார்.

விடுமுறை நாட்களைத் தவிர்த்து 23 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது.இந்தக் கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் விவாதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் இன்று (திங்கள்கிழமை) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close