[X] Close

குடிநீர் தட்டுப்பாடு; தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 22 Jun, 2019 12:49 pm
  • அ+ அ-

குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தாண்டு தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், ஏரி, குளங்களை தூர்வாருதல், நிலத்தடி நீரை தேக்கி வைத்தல் ஆகியவற்றை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனக்கூறி, திமுக 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று (சனிக்கிழமை) சென்னை ஜாபர்கான்பேட்டை அருகே உள்ள காமராஜர் சிலை அருகில் திமுக எம்எல்ஏவும் முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

water 1.PNG 

குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சரிவர செய்யாததாலேயே, தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், தமிழக அரசுக்கு மக்களின் மீது அக்கறையில்லை எனவும், ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து முழக்கஙகள் எழுப்பினர். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் கோரிக்கை வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், "குடிநீர் தட்டுப்பாடு வதந்தி என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகிறார். இதுபோன்ற போராட்டங்கள் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா என்பது தெரியவில்லை. மக்களின் இத்தகைய போராட்டங்கள் மூலம், அதிமுக அரசு மிக விரைவில் துடைத்தெறியப்பட வேண்டிய சூழல் நெருங்கிக் கொண்டிருக்கிறது", என தெரிவித்தார். இதுபோலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close