[X] Close

நடிகர் சங்க உறுப்பினர்கள் நீக்கம்: உயர் நீதிமன்றம் திருப்தி- வழக்கு ஒத்திவைப்பு


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 20:14 pm
  • அ+ அ-

நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நீக்கியது தொடர்பான தீர்மான ஆவணங்களை படித்து திருப்தி தெரிவித்த நீதிபதி எதிர்தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து ஜூன். 25-க்கு வழக்கை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்.

நடிகர் சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்ட  பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க கோரி ஏழுமலை என்ற உறுப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது,

வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கம் தரப்பு வழக்கறிஞர்,

“3,171 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.  நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டது. நீக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் போலியானவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் அல்ல” என  தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுப்பிரணியன்,  “போலியான உறுப்பினர்கள் என்றால் எப்படி கடந்த முறை நடந்த நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்திருப்பார்கள்” என கேள்வி எழுப்பினார்

நடிகர் சங்க உறுப்பினர்களை நீக்கியது, இடை நீக்கம் செய்தது தொடர்பான தீர்மான ஆவணங்கள் அனைத்தையும் மதியம் 12.30 மணிக்கு தாக்கல் செய்ய நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டார்.

வழக்கு மீண்டும் மதியம் விசாரணைக்கு வந்தபோது, உறுப்பினர் நீக்கம் தொடர்பான ஆவணங்களையும், தீர்மானங்களையும் நடிகர் சங்கம் தாக்கல் செய்தது.

அவற்றை படித்துப்பார்த்த நீதிபதி உறுப்பினர் நீக்கத்திற்கான  நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக திருப்தி தெரிவித்தார். மேலும் உறுப்பினர் நீக்கத்துக்கான ஏழுமலை குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என தெரிவித்தார். வேண்டுமென்றால் தேர்தல் முடிந்தவுடன் அதன் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, ஏழுமலை தரப்பில், “பொது செயலாளர் இல்லாமல் 2018  ஏப்ரலில் செயற்குழு கூட்டம் நடந்ததாகவும், உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலே நீக்கம் செய்துள்ளதாகவும், அவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அதையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close