[X] Close

20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு; ‘இப்போது தேவையில்லை’ என தமிழக அரசு பதில்


20

  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 19:19 pm
  • அ+ அ-

-சிறப்புச் செய்தியாளர் (தி இந்து ஆங்கிலம்)

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து அண்டை மாநிலமான கேரளா சுமார் 20 லட்சம் லிட்டர் குடிநீர் அனுப்ப முன்வந்ததாகவும் தமிழக அரசு இப்போது தேவையில்லை எனக் கூறியதாகவும் கேரள முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வறண்ட பகுதிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயிலில் அனுப்ப கேரள அரசு முன்வந்தது. ஆனால், “தமிழக முதல்வர் அலுவலகம் இதனை நிராகரித்தது. அதாவது எங்களுக்கு தமிழக முதல்வர் அலுவலகம் அனுப்பிய பதிலில் இப்போதைக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளது” என்று கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டநாட்களாக மழை இல்லாமல் வறண்டு கிடக்கும் தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தென்மேற்குப் பருவமழை தாமதமாக வந்த நிலையிலும் கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய நீர் உள்ளதால் தமிழகத்துக்கு வழங்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close