[X] Close

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.528 உயர்வு


528

  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 18:37 pm
  • அ+ அ-

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 704-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் இன்று திடீரென தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 213-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று ரூ.3 ஆயிரத்து 147-க்கு விற்கப்பட்டது.

அதேபோல 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.26 ஆயிரத்து 952 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வங்கி இந்த ஆண்டில் வட்டியைக் குறைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை தங்க வியாபாரிகள் சங்கத்தினர் கூறும்போது, ''சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதால், இங்கும் தங்கத்தின் விலை கிடுகிடுவென ஏறியுள்ளது. இதனால், நகை விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது'' என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close