ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க தயாராக இல்லை: ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்


ஆர்.பி.உதயகுமார் | கோப்புப்படம்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக திரைமறைவில் ரகசிய முயற்சி நடப்பதாகவும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தேர்தல் கூட்டணி தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதில் உண்மை ஏதுமில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பிளவுக்கு அடித்தளமிட்டவர். அதிமுக அரசைக் கலைக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர். கட்சிக்கு எதிராக பல்வேறு துரோகங்கள் செய்தாலும், ஒற்றுமை முக்கியம் எனக் கருதி, மீண்டும் அவரைகட்சியில் சேர்த்து, முக்கியப் பொறுப்புகளை பழனிசாமி வழங்கினார்.

ஒற்றைச் சீட்டுக்காக இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வத்தை மீண்டும்கட்சியில் சேர்த்துக்கொள்ள அதிமுக தயாராக இல்லை. அவரைகட்சியில் சேர்ப்பதை தொண்டர்களும் விரும்ப மாட்டார்கள். இவ் வாறு அவர் கூறினார்.