[X] Close

எம்எல்ஏ ராதாமணி மரணம்: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 09:17 am
  • அ+ அ-

விக்கிரவாண்டி தொகுதி திமுகஎம்எல்ஏ கு.ராதாமணி காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவிக்கை செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த கு.ராதாமணி, உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, அவரது இறப்பு சான்றிதழைப் பெற்ற சட்டப்பேரவை செயலகம், விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கை, தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரிவாயிலாக, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, தேர்தல் ஆணையம் தொகுதி காலியாக இருப்பதை பதிவு செய்து, இடைத்தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

2 தொகுதிக்கு இடைத்தேர்தல்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், நான்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நான்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த 22 தொகுதிஇடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றியதால், சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 101 ஆக உயர்ந்தது. தற்போது விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மறைவால், திமுகவின் பலம்100 ஆக குறைந்துள்ளது. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் பலம் 8-ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close