[X] Close

சென்னை உட்பட 13 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த வெயில்: 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்


13-100-13

  • kamadenu
  • Posted: 18 Jun, 2019 09:02 am
  • அ+ அ-

தமிழகத்தில் நேற்று 13 நகரங்களில் 100 டிகிரி அளவை விட அதிகமாக வெயில் சுட்டெரித்தது. அடுத்த சில தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:‘வாயு’ புயல் வலுவிழக்காததால், தென்மேற்கு பருவக் காற்று தமிழகம் நோக்கி வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்புயல் குஜராத்தில் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் மழை தீவிரமடையும். வெப்பநிலையும் வெகுவாக குறையும்.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, கடலூரில் 104 டிகிரி, திருச்சி, வேலூரில் தலா 103 டிகிரி, திருத்தணி, காரைக்கால், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, பாளையங்கோட்டையில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த சில தினங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். மேலும் மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்கும்.

வெப்பச் சலனம் காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு ந.புவியரசன் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close