மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் மரணம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மின்சாரம் பாய்ந்து 10-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள எச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நரேஷ்(14). இவர், மொளச்சூர் அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். விடுமுறை நாள் என்பதால், நரேஷ் தன் வீட்டு அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் ஒருவீட்டில் பழுது நீக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அதில் மின்சார வயர் அறுந்து கிடந்தது. இதை அறிந்திராத நரேஷ் அதன் மீது கால் வைத்த நரேஷ், மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே இன்று காலையில் தென்காசியில் மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் முத்துகுமார்(18) என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

x