[X] Close

அடுத்த 2 நாட்களுக்கு கடும் வெப்ப அலை: திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை


2

  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 20:27 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதி தீவிரமான வெப்ப அலை இருக்கும் மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்த அறிவிப்பில் " அடுத்த இரு நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி தீவிரமாக வெப்ப அலை இருக்கும். அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் வெப்ப அலை நீடிக்கும். ஆதலால், மக்கள் யாரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை சன்ஸ்ட்ரோக்கை தவிர்க்கும் வகையில் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் " என அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த இரு நாட்களுக்கு மக்கள் வெளியே செல்லும் போது குடைகளை கண்டிப்பாக எடுத்துச் செல்லவும், அதிகமான குடிநீர் அருந்தவும், பழரசங்கள் அருந்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை நீடித்து வருகிறது. ஏறக்குறைய 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. வழக்கத்துக்கு மாறாக, வெப்பம் இயல்பு நிலையைக் காட்டிலும் கூடுதலாக 4 முதல் 5 டிகிரி அதிகரித்து வருகிறது, இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேசமயம், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மத்திய தமிழகம் ஆகியவை தென் மேற்கு பருவமழையால் ஆங்காங்கே மழை பெய்துவருகிறது கவனிக்கத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close