[X] Close

நான் நடிகர் சங்க உறுப்பினரே இல்லை; அதனால் யாருக்கு ஆதரவு என்பதில் கருத்து இல்லை: சரத்குமார்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 15:31 pm
  • அ+ அ-

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் யாருக்கு ஆதரவு தருகிறார் என்ற கேள்விக்கு, "நான் நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. அதனால் அதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை" என்றார்.

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவர், "உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பின் எனது நிலைப்பாட்டை கூறுகிறேன். நான் நடிகர் சங்க உறுப்பினராகவே இல்லை. அதனால் எனது ஆதரவு யாருக்கு என்பதில் கருத்து ஏதும் இல்லை.

தேர்தல் என்றால் இரு அணிகள் இருக்கத்தான் செய்யும்.  ஆனால், ஒரே அணியில் இருந்தவர்கள் தற்போது இரண்டு அணியினராகப் பிரிந்துள்ளனர். அவர்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்.

நாங்கள் இருக்கும் போது இது போன்று இல்லை. புதிய அணி உருவாக்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை பதிவு செய்து தேர்தலை சந்தித்தார்கள்.

தற்போது கூட இருந்தவர்களை அவர்கள் மேல் குறையைச் சொல்லி எதிர்க்கட்சியில் நிற்கிறார்கள் சங்கத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் .சங்கத்தின் கட்டடம் கட்ட வேண்டிய எண்ணம் தான் எல்லோருக்கும் இருக்கிறது.

ஒற்றுமை என்பது இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சங்கம் உருவாக்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து" என்றார்.

தண்ணீர் பிரச்சினை பற்றி, "தண்ணீர் பிரச்சினையைப் பொறுத்தவரை எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்பது கிடையாது. இது மக்களின் பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கான அணுகுமுறையில் அனைவரும் ஒன்று சேர்ந்து எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் அவசியம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது மழை நீர் சேகரிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறினார் அதை கடுமையாக தொடர்ந்து செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் தற்போது மழைநீர் சேகரிப்பு செயல்பாடுகள் குறைந்துள்ளது" என்று கருத்து கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close