[X] Close

இந்தியன் வங்கி கடன் முறைகேடு வழக்கு; முன்னாள் தலைவர் உட்பட 17 பேருக்கு 3 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு


17-3

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:11 am
  • அ+ அ-

வங்கிக்கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் உள்ள 7 தனியார் நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியன் வங்கியின் அண்ணா சாலை, எழும்பூர், திருமங்கலம், கோடம்பாக்கம், ஆழ்வார்பேட்டை கிளைகள் மூலமாக கடந்த 1995-96-ம் ஆண்டில் ரூ.30 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அப்போதைய இந்தியன் வங்கி தலைவரான கோபாலகிருஷ்ணன், வங்கி கிளை மேலாளர்கள், 7 தனியார் நிறுவனத்தினர் என மொத்தம் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதில் விசாரணையின்போது 3 பேர் இறந்துவிட்டனர். மற்றவர் கள் மீதான வழக்கு விசா ரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருநீல பிரசாத் முன்பு நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப் பட்டது. இதற்காக குற்றம் சாட் டப்பட்ட அனைவரும் நீதிமன் றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் இந்தியன் வங்கி முன்னாள் தலைவரான கோபாலகிருஷ்ணன், ஏ.வி.சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், சோமையாஜி உள்ளிட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அவர்கள் அனைவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.10.90 லட்சம் அபராதமும் விதித்தார்.கட்டுமான பணிகளுக்காக 1995-96-ம் ஆண்டில் ரூ.30 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close