[X] Close

காவிரி பிரச்சினையில் ஆர்வம் காட்டாதது ஏன்?- தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:54 am
  • அ+ அ-

8 வழிச்சாலையில் இருக்கும் ஆர்வம், அவசரத்தை காவிரி பிரச்சினையில் தமிழக முதல்வர் காட்டாதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஆகியவை திருச்சியில் நேற்றிரவு நடைபெற்றது.

மாவட்டச் செயலா ளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:பொய் பிரச்சாரம் செய்து நாம் வெற்றி பெற்றுவிட்டதாக சிலர் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் நாம் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று என்ன பயன் என்பதுபோல சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது நாடாளுமன்றம் கூடும் போது தெரியும்.

வழக்கமாக கூட வேண்டிய நாட்களுக்குப் பதிலாக, 5 மாதத்துக்கு பிறகு காவிரி ஆணையத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என கண்காணிப்பதுதான் ஆணையத்தின் பணி. ஆனால் அவர்கள், அதைவிட்டுவிட்டு மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவது பற்றி பேசுகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. பல மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையிலும் 8 வழிச்சாலை அமைப்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார். 8 வழிச்சாலையில் காட்டும் ஆர்வம், அவசரம் காவிரி பிரச்னையில் ஏன் இல்லை? காரணம், 8 வழிச்சாலை வந்தால் ரூ.3,000 கோடி கிடைக்கும். காவிரியில் நீர் வந்தால் கமிஷன் கிடைக்குமா?

எதில், என்ன கிடைக்கும் என்ற லாபத்தை அடிப்படையாக வைத்து செயல்ப டுகின்றனர். மத்தியிலிருந்து திணிக்கப்படும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களைக்கூட எதிர்க்க முடியாதவர்களாக ஆட்சியாளர் கள் உள்ளனர். இவற்றுக்கெல்லாம் எதிராக வரும் 12-ம் தேதி நம்மாழ்வார் பெயரில் செயல்படும் பேரியக்கத்தின் மூலம் விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை நடத்தப்படும் மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு திமுக முழு அளவுக்கு ஆதரவு கொடுக்கும். சட்டப்பேரவை தேர்தலிலும் இவர்களுக்கு மரண அடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close