[X] Close

‘இரட்டை தலைமை நெருக்கடியால் அதிமுகவுக்கு இறங்குமுகம் தொடக்கம்’


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:40 am
  • அ+ அ-

அண்ணா திராவிடர் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, நடராஜன் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு கட்சிக் கொடியை ஏற்றிவைத்த அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் வி.திவாகரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் எங்களது கட்சி போட்டியிடும். வரும் 12-ம் தேதி(நாளை) ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற உள்ள மனிதசங்கிலி போராட்டத்தில் எங்கள் கட்சி கலந்துகொள்ளும்.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் நடவடிக்கையால் அதிமுகவுக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது. இரட்டை தலைமை குறித்த பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், பொதுக்குழுவைக் கூட்டி பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

அண்ணா திராவிடர் கழக மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெய்ஆனந்த் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, "மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததன் மூலம் அக்கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவுக்கு குறைந்துவிட்டது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலைதான் இனி அதிமுகவுக்கும்" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close